மின் வயர் அறுந்து விழுந்து மரக்கடையில் தீ
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் மின் வயர் அறுந்து விழுந்ததில் மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கதவு, ஜன்னல் உள்ளிட்ட மரச்சாமான்கள் எரிந்து நாசமானது.சிவகாசி அருகே திருத்தங்கல் விஸ்வகர்மா நகரை சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு திருத்தங்கல் பஸ்ஸ்டாண்ட் எதிரே ஸ்ரீ வெற்றி விநாயகா என்ற பெயரில் மரக்கடை உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 1: 10 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதில் கடையில் இருந்த கதவு ஜன்னல் உள்ளிட்ட மரச் சாமான்கள் எரிந்து நாசமானது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். விசாரணையில் மின் வயர் அறுந்து விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.