உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டடத்தை கைப்பற்றுவதில் இரு பிரிவுகளுக்குள் போட்டி பூட்டை உடைத்து நடந்த கூட்டம்

அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டடத்தை கைப்பற்றுவதில் இரு பிரிவுகளுக்குள் போட்டி பூட்டை உடைத்து நடந்த கூட்டம்

விருதுநகர்:விருதுநகரில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக கட்டடத்தை கைப்பற்றுவதில் இரு பிரிவினருக்குள் போட்டி நிலவுகிறது. இதில் நேற்று ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் அலுவலக பூட்டை உடைத்து எழுச்சி நாள் கருத்தரங்கம் நடத்தியுள்ளனர்.விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் மாவட்ட மையம் கலைக்கப்பட்ட பின் இரு பிரிவுகளாக அரசு ஊழியர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு பிரிவுக்கு மாவட்ட தலைவராக பாண்டித்துரை, செயலாளராக கருப்பையா உள்ளனர். மற்றொரு பிரிவுக்கு மாவட்ட தலைவராக அந்தோணிராஜ், செயலாளராக வைரவன் உள்ளனர்.மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர் நிதியில் விருதுநகர் ஆனைக்குழாய் பகுதியில் கட்டப்பட்ட சங்க அலுவலக கட்டடம் 2007ல் திறக்கப்பட்டது. இந்த அலுவலக கட்டடம் அரசு ஊழியர் சங்கத்தின் ஒரு பிரிவான அந்தோணி ராஜ், வைரவன் தலைமையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மற்றொரு அரசு ஊழியர் சங்க பிரிவான பாண்டித்துரை, கருப்பையா தலைமையில் சங்க கட்டடத்தின் பூட்டு உடைக்கப்பட்டு, கொடியேற்றப்பட்டு எழுச்சி நாள் கருத்தரங்கம் நடந்தது.

பூட்டை உடைத்ததற்கு கண்டனம்

மற்றொரு பிரிவு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அந்தோணி ராஜ், செயலாளர் வைரவன் கூறியதாவது: மாவட்ட அரசு ஊழியர் சங்க கட்டடத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஆவணங்களை ரகசிய இடத்திற்கு கொண்டுச் சென்றும், சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது அத்துமீறி உள்ளே சென்றது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை