உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆற்றை பழாக்கும் குப்பைக் குவியல் --

ஆற்றை பழாக்கும் குப்பைக் குவியல் --

ராஜபாளையம் : ராஜபாளையம் ஆற்றுப்பகுதி அருகே குப்பைகளை கொட்டி நாசமாக்கும் செயலை தொடர்ந்து கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அய்யனார் ஆறு உருவாகி மெயின் ரோட்டை கடக்கும் பகுதியில் முடங்கியாறு என பெயர் பெற்று பாலம் வழியே சாலையை கடக்கிறது. இப்பகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி சார்பில் குப்பை கொட்டும் இடத்தை ஆற்று ஓரம் அமைத்துள்ளனர். பெயரளவிற்கு வைக்கப்பட்டுள்ள குப்பை பிரிக்கும் இடம் சிமெண்ட் தொட்டிகள் காட்சி பொருளாகி இருக்கும் நிலையில் சுமார் 100 மீட்டர் சுற்றளவிற்கு குடியிருப்பு, விவசாய, இறைச்சி, செப்டிக் டேங்க் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். மழைக்காலங்களில் மேடானப் பகுதியில் இருந்து வழியும் நீர் அருகில் உள்ள ஆற்றில் கலந்து மாசுபடுத்தி வருகிறது. இவை கண்மாய்கள் வழியே கலந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது குறித்து குமார்: பல ஆண்டுகளாக முறையாக கழிவு மேலாண்மை செய்யாமல் ஆற்றை பாழாக்கி வருகின்றனர். மெயின் ரோடு ஒட்டிய பகுதியிலேயே நடைபெறும் இந்த விதி மீறலை கண்டுகொள்ளாத அதிகாரிகள் செயலால் துாய்மையான ஆறு கழிவுகள் கலக்கும் இடமாக மாறிவிட்டது. கண் முன்னே நடைபெறும் பாதிப்பை அனைவரும் முன்வந்து தடுத்து நிறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ