வத்திராயிருப்பில் ஆர்ப்பாட்டம்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் சேதமடைந்த அரசு மருத்துவமனை கட்டடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டடம் கட்டித் தரக்கோரி இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி.க்கள் அழகிரிசாமி, லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னு பாண்டி பேசினர். ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.