உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்து வாலிபர் பலி

நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்து வாலிபர் பலி

விருதுநகர்:விருதுநகர் நான்கு வழிச்சாலையில் நாய் குறுக்கே வந்ததால் டூவீலர் விபத்துக்குள்ளானதில் பின்னால் அமர்ந்து வந்த கள்ளிக்குடியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா 21, பலியானார்.மதுரை மாவட்டம் கள்ளிக்குடி சூர்யா நகரைச் சேர்ந்தவர் ராகுல் 20, மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா 21. இருவரும் முட்டை வண்டி லோடுமேன்கள். நேற்று காலை விருதுநகரில் நண்பர்களை பார்த்து விட்டு கள்ளிக்குடி நோக்கி டூவீலரில் நான்கு வழிச்சாலையில் வந்தனர். வடமலைக்குறிச்சி பாலம் அருகே நாய் குறுக்கே வந்ததால் டூவீலர் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பின்னால் அமர்ந்து வந்த கார்த்திக் ராஜா 21, பலியானார். ராகுல் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை