உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஏ.சி., பஸ்கள் குறைப்பு; பை-பாஸ் ரைடர் அதிகரிப்பு; அடிக்கடி பழுதால் மாற்றம்

ஏ.சி., பஸ்கள் குறைப்பு; பை-பாஸ் ரைடர் அதிகரிப்பு; அடிக்கடி பழுதால் மாற்றம்

விருதுநகர் : மதுரையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் அரசு ஏ.சி., பஸ்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் பை-பாஸ் ரைடர் பஸ்கள் அதிகமாக்கப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு 20க்கும் மேற்பட்ட அரசு ஏ.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் அடிக்கடி பழுது ஏற்பட்டு பயணிகள், ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.மேலும் ஏ.சி., பஸ்களில் ஏற்படும் பழுதை சரிசெய்ய அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாளர்கள் இல்லை. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பஸ்களை அனுப்ப வேண்டும். பழுது சரிசெய்து பஸ் மீண்டும் வருவதற்கு ஒரு வாரம் ஆகிறது. பழுதுகள் அடிக்கடி ஏற்படுவதால் ஏ.சி., பஸ்களின் எண்ணிக்கையை குறைத்து பை-பாஸ் ரைடர் பஸ்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளன.அரசு போக்குவரத்து கழக அதிகாரி கூறியதாவது: வெயிலின் தாக்கம்குறைந்து விட்டதால் ஏ.சி., பஸ்களுக்கு வரவேற்பில்லை. வரவேற்பு உள்ள பிற பகுதிகளுக்கு மாற்றி இயக்கவும், இந்த வழித்தடங்களில் கூடுதல் பை-பாஸ் ரைடர்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பில்லிங் மிஷின் மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ