உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிநீர் குழாய் சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடாததால் விபத்து அச்சம்

குடிநீர் குழாய் சரி செய்ய தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடாததால் விபத்து அச்சம்

நரிக்குடி: நரிக்குடி மாயலேரி பஸ் நிறுத்தம் அருகில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணானது. சில தினங்களுக்கு முன் ஊராட்சி நிர்வாகம் சார்பாக சரி செய்ய பள்ளம் தோண்டப்பட்டது. குழாய் சரி செய்யப்பட்டு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. மண் போட்டு மூடாததால் பள்ளமாக உள்ளது. அப்பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளதால் அடிக்கடி வாகன போக்குவரத்து உள்ளது. நிலை தடுமாறி கவிழும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. அத்துடன் காலை, மாலை நேரங்களில் இந்த வழியாக பல்வேறு ஊர்களுக்கு பள்ளி கல்லூரி மாணவர்கள் டூவிலர், சைக்கிளில் சென்று வருகின்றனர். வயதானவர்கள் உட்பட பலர் வெளியூர்களுக்கு செல்ல பஸ் ஏற வருகின்றனர். தவறி விழும் ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது. விபத்திற்கு முன் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !