கூம்பு வடிவ ஒலிபெருக்கி உபயோகித்தால் நடவடிக்கை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றியும், இரவில் ஒலிபெருக்கி பயன்படுத்துவோர், தடை செய்த கூம்பு வடிவ ஒலிபெருக்கியினை உபயோகிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் அனுமதியின்றி ஒலி பெருக்கிகளை நிறுவி பயன்படுத்துபவர்கள், இரவு நேரங்களில் ஒலிபெருக்கியை பயன்படுத்துபவர்கள், தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்துபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள், பறிமுதல் செய்து பொது சுகாதாரம், காற்று மாசுபாடு சட்டத்தின் படி நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது.மேலும் இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ஒலி பெருக்கினை பயன்படுத்தக்கூடாது, தடை செய்த கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சவுண்ட் சிஸ்டம் வைத்திருக்கும் உரிமையாளர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.