பணியில் போதை: எஸ்.எஸ்.ஐ., மாற்றம்
ராஜபாளையம்:ராஜபாளையம் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.எஸ்.ஐ., யாக பணியாற்றிவர் மோகன்ராஜ் 53. இவர் பணி நேரத்தில் போதையில் இருந்ததாகவும், சக போலீசாருக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இது குறித்து டி.எஸ்.பி., ப்ரீத்தி விசாரணை நடத்தினார். புகார் உண்மை என தெரிய வந்ததையடுத்து மோகன்ராஜை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., கண்ணன் உத்தரவிட்டுள்ளார். துறைரீதியிலான விசாரணைக்குப்பின் அவர் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.