உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நுாலகத்தில் மாணவ உறுப்பினர்கள் சேர்ப்பு

நுாலகத்தில் மாணவ உறுப்பினர்கள் சேர்ப்பு

திருச்சுழி: திருச்சுழி நூலகத்தில் மாணவ உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது. திருச்சுழி வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் 50 பேர் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்தனர்.இதற்கான விழாவில் தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு உரிய உறுப்பினர் கட்டணத்தை பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் கதிரேசன் நன்கொடையாக வழங்கினார். நிகழ்ச்சியில் நூலகர் பாஸ்கரன், வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் மற்றும் ஆசிரியர்கள் வாசகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி