கூடுதல் ரயில் பெட்டிகள் தேவை
விருதுநகர் : தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு ம.நீ.ம., மத்திய மாவட்டச் செயலாளர் காளிதாஸ் அனுப்பிய மனு: செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் 10 பெட்டிகளுடன் இயங்குகின்றது. இதில் தென்காசி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் பயணிகள் செல்வதால் கூட்ட நெரிசலால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த ரயிலில் கூடுதலாக 5 பெட்டிகளை இணைக்க வேண்டும்.