மேலும் செய்திகள்
காபி சாகுபடி கருத்தரங்கு
22-Mar-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சவுடாம்பிகா பாலிடெக்னிக் கல்லுாரியில் வேளாண் கருத்தரங்கு, கண்காட்சி நடந்தது.கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு ஒவ்வொரு பயிர்களுக்கான சாகுபடி தொழில் நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம், என்றார். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர், தலைவர் செல்வி ரமேஷ், பூச்சியில் நோய்கள் துறை விஞ்ஞானிகள் கலந்து கொண்டு உர மேலாண்மை உத்திகள், நுட்பங்களை விளக்கினர்.நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், வேளாண் வணிகம் துணை இயக்குனர் ரமேஷ், துணை இயக்குனர்கள் வளர்மதி, லதா பேசினர். ஏற்பாடுகளை அருப்புக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் சுந்தரவல்லி, தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரியங்கா, அலுவலர்கள் செய்தனர்.
22-Mar-2025