டாக்டருக்கு அ.தி.மு.க. ஆறுதல்
ஸ்ரீவில்லிபுத்துார்: -ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ரமேஷ் பாபு கத்தியால் குத்தப்பட்டு காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் தொகுதி எம்.எல்.ஏ. மான்ராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். பின்னர் குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரிடம் அலைபேசி மூலம் மான்ராஜ் கோரிக்கை விடுத்தார்.