அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்
சாத்துார்: வெம்பக்கோட்டையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் சாத்துார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சுப்பிரமணியன்,ராஜா வர்மன், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் திலீப் கண்ணன், ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நாகராஜன் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் ராமர் பேசினர். நகர , ஒன்றிய கழகச் செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள்,நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.