அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
சாத்துார்::சாத்துாரில் தமிழக அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சை கண்டித்தும் அவரை பதவி விலக வலியுறுத்தி விருதுநகர் கிழக்கு அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிவசாமி, மணிமேகலை, எஸ்.ஜி.சுப்பிரமணியன், எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சீதாராமன், குருசாமி, சண்முகக்கனி, நகரச் செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் முனீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடந்ததால் 150க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது.