சதுரகிரியில் ஐப்பசி அமாவாசை வழிபாடு
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஐப்பசி மாத அமாவாசை வழிபாடு சிறப்புடன் நடந்தது.இதனை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தீபாவளி பண்டிகையால் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. மதியம் 12:00 மணி வரை 200க்கும் மேற்பட்ட பக்தர்களே மலையேறினர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு அமாவாசை வழிபாடு பூஜைகளை கோயில் பூஜாரிகள் செய்தனர்.