உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஏசி வசதியுடன் அங்கன்வாடி திறப்பு

ஏசி வசதியுடன் அங்கன்வாடி திறப்பு

ராஜபாளையம், : ராஜபாளையம் அருகே மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சிக்குட்பட்ட தென்றல் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏசி வசதியுடனான அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ஜெயசீலன் திறந்து வைத்தார். மொத்தம் 25 குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி மையத்தை ரூ.5 லட்சம் செலவில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதியுடன் நவீன கழிப்பறை, சமையலறையுடன் கூடிய அங்கன்வாடி மையம் திறந்து வைத்ததுடன் மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் மதிய உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை