உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு

மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு

திருச்சுழி:திருச்சுழி அருகே முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மலேரியா எதிர்ப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக நடந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள் புனிதா, பிரியதர்ஷினி கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு மலேரியா காய்ச்சல், வயிற்றுப்போக்கு நோய் ஆகியவை பரவும் முறைகள் குறித்தும், தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் வீடியோ காட்சிகள் மூலமாக வழங்கப்பட்டது. வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் லட்சுமி நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ