உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

வத்திராயிருப்பு,: திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாநில அளவிலான மாணவர்களுக்கான பால்பாட்மின்டன் போட்டியில் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர் அணி முதலிடம் பிடித்து தங்க பதக்கம், வெற்றிக்கோப்பை பெற்றனர்.இதில் தமிழகத்தில் சிறப்பாக விளையாடக்கூடிய 16 அணிகள் பங்கேற்றன. சிறந்த ஆட்டக்காரர்களாக மாணவர்கள் கமலேஷ், கேம்சந்த் குமார் தேர்வு செய்யப்பட்டனர். சாதனை மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !