மேலும் செய்திகள்
லாட்ஜில் வேட்டை தடுப்பு காவலர் மரணம்
09-Sep-2025
ராஜபாளையம்:விருதுநகர்மாவட்டம் ராஜபாளையத்தில் மான் வேட்டை குறித்து விசாரிக்க சென்ற வனத்துறையை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலரை கட்டையால் தலையில் தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். ராஜபாளையம் முடங்கியாறு ரோட்டில் அம்பேத்கர் நகரில் மான் இறைச்சி வேட்டையாடி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வேட்டை தடுப்பு காவலர்கள் ராம கண்ணன், பூபதி, வனக்காப்பாளர் ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் அங்கு சென்று ஏழு பேரிடம் விசாரணை நடத்தியதில் மான் கறி சமைத்துக் கொண்டிருந்தது தெரிந்தது.அவர்களைப் பிடிக்க முயன்ற போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சாலமன் என்ற தெலுக்கன் கட்டையால் தாக்கியதில் வேட்டை தடுப்பு காவலர் ராம கண்ணனுக்கு பின்னந்தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தன்னை தாக்கிய நபர் கஞ்சா போதையில் இருந்ததாக அவர் தெரிவித்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Sep-2025