உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விநாயகர் ஊர்வலத்தில் தாக்குதல்

விநாயகர் ஊர்வலத்தில் தாக்குதல்

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போலீசார் தங்களை தாக்கியதாக ஹிந்து முன்னணி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். ஹிந்து முன்னணி சார்பில் நேற்று மாலை 6:50 மணிக்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் துவங்கியது. இரவு 9:05 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் மணிக்கூண்டு பகுதியில் ஊர்வலம் வந்தது. அப்போது பள்ளிவாசல் பகுதியில் வேகமாக கடந்து செல்லுமாறு ஊர்வலத்தில் முன்னால் வந்தவர்களை போலீசார் இழுத்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளை பயன்படுத்தி போலீசார் தங்களை தாக்கியதாக ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் யுவராஜ், செயலாளர் வினோத் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களை பா.ஜ., மாவட்ட செயலாளர் சரவணதுரை, மத்திய அரசு வழக்கறிஞர் சாந்தகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். யுவராஜ் கூறுகையில், 'ஊர்வலம் துவங்கியது முதல் அமைதியாகத்தான் சென்றது. மணிக்கூண்டு பகுதியில் சிவகாசி டி.எஸ்.பி. பாஸ்கர் மற்றும் போலீஸ் குழுவினர் வலுக்கட்டாயமாக இழுத்துவிட்டு தாக்கினர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !