உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டாக்டரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: 2 பேர் கைது

டாக்டரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: 2 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர் ஜெகநாத் பிரபு 44, இவர் சிவகாசி அரசு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மயக்கவியல் டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு தனது காரில் செண்பகத்தோப்பு ரோட்டில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு செல்லும்போது டூவீலரில் வந்த திவாகர், பாதம் பிரியன், மகாலிங்கம், காளிராஜ் ஆகியோர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் அலைபேசிகளை பறிக்க முயன்றனர். இது குறித்து போலீசில் சொன்னால் கொல்லாமல் விடமாட்டோம் என மிரட்டியுள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து பாதம்பிரியன், மகாலிங்கம் ஆகிய இருவரை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை