உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கவனம்: கடும் வெயிலுக்கு கால்நடைகள் பாதிக்க வாய்ப்பு: வளர்ப்போர் விழிப்புடன் செயல்படுவது அவசியம்

கவனம்: கடும் வெயிலுக்கு கால்நடைகள் பாதிக்க வாய்ப்பு: வளர்ப்போர் விழிப்புடன் செயல்படுவது அவசியம்

மாவட்டத்தில், பசு, ஆடு, மாடு, பன்றிகள் வளர்த்து வருகின்றனர். பெரும்பாலும் தோட்டம் வைத்திருப்பவர்கள் தேவையான உணவுகளுடன் செட் அமைத்து வளர்த்து வருவர். கிராமங்கள், நகரங்களில் வளர்ப்பவர்கள் குறுகலான இடங்களில் காற்றோட்டம் இல்லாமல் சிலர் வளர்த்து வருவர். கிராமப்புறங்களில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம். தற்போது கால மாற்றத்தால் கோடை வெயில் துவங்கும் முன் கடுமையான வெயில் தாக்கி வருகிறது. ஆட்கள் நடமாட முடியாத நிலை இருந்து வரும் சூழ்நிலையில் கால்நடைகளின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.இதனால் கால்நடைகளை பாதுகாப்பாகவும் கவனமுடனும் வளர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்கு தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை கால்நடை வளர்ப்போர் எடுக்க வேண்டியது அவசியம் .கடுமையான வெயில் தாக்கத்திற்கு கால்நடைகள் சுணங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அதுபோன்ற நிலைமை ஏற்படாமல் இருக்க, மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும் கால்நடைகளை வெயிலுக்கு முன்பாக அழைத்துச் சென்று வருவது நல்லது.அதிக அளவில் தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். உடல் உஷ்ணத்தை குறைக்க அடிக்கடி குளிப்பாட்ட வேண்டும். நோய் தாக்கம் அதிகம் ஏற்படும் என்பதால், தினமும் தண்ணீரில் தாது உப்பு கலவை கலந்து கொடுக்க வேண்டும். மாடுகளுக்கு தினமும் 30 கிராம், ஆடுகளுக்கு 15 கிராம், பன்றிகளுக்கு 50 கிராம் அளவு கொடுக்க வேண்டும். இதன் விலை ஒரு பாக்கெட் ரூ. 65ல் கிடைக்கிறது. கால்நடைத்துறை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கால்நடை பயிற்சி ஆராய்ச்சி நிலையத்தில் இது போன்ற மருந்துகள் கிடைக்கும். இதுபோன்று செயல்படுத்தாவிட்டால் கால்நடைகள் சுணங்கி நோய் தாக்கத்திற்கு ஆளாவதுடன், பசுமாடுக்கு பாலின் அளவு குறைய வாய்ப்புள்ளது.பாலின் அளவை சீராக வைக்க இது போன்ற கலவை கொடுக்க வேண்டியது அவசியம். ஆகவே கால்நடை வளர்ப்போர் கவனமுடன் செயல் படுவதுடன் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி