கலசலிங்கம் பல்கலைக்கு விருது
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி சேவை விருது வழங்கப்பட்டது.17 ஆண்டுகளாக வாய் பேசாத, காது கேளாத மாணவர்களுக்கு பி.டெக் படிப்பு ஏற்படுத்தி கணினி பயிற்சியளித்து வேலை வாய்ப்பு வழங்கி, சிறப்பான கல்வி சேவை புரிந்ததை பாராட்டி கோவையில் நடந்த இம்ப்ரஷன் ஏ.டி.ஏ.எக்ஸ்போ 2024 என்ற அறிவியல் கண்காட்சியில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் கல்வி சேவை விருதை கலெக்டர்கிராந்தி குமார் வழங்கினார். இதனை துறை தலைவர் கார்த்திகா தேவி பெற்றுக் கொண்டார்.மாற்றுத்திறனாளிகள் துறை தலைவர், பேராசிரியர்கள், மாணவர்களை பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர்அறிவழகி, துணைத்தலைவர் சசி ஆனந்த், துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் பாராட்டினர்.