உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர்: விருதுநகரில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கான நடை என் நாள் - என் உரிமை என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளான குழந்தைத் திருமணம், இளம் வயது கர்ப்பம், பாலியல் வன்முறை, பள்ளி இடைநிற்றல், போதைப்பொருள் பயன்பாடு, குழந்தைத் தொழிலாளர், சமூக ஊடகங்கள் தாக்கம், பாலின வேறுபாடு என குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளை கண்டறிந்தால் உடனடியாக குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபட வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர். 1098 - குழந்தைகளுக்கு சிறப்பு இலவச உதவி எண் தொடர்பான துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, மாணவர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !