உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர்: விருதுநகர் சட்டப்பணிகள் குழுவின் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு, கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் குழு தலைவர் நீதிபதி ராஜகுமார் தலைமையில் நடந்தது. ஊர்வலத்தை நீதிபதி ஐயப்பன் துவக்கி வைத்தார்.மேலும் தலைமை ஆசிரியை சுஜாதா தாமஸ், வேல்டு விஷன் தொண்டு நிறுவன மேலாளர் ஜெயகுமார், ஒருங்கிணைப்பாளர் கேப்டன் மால், வச்சக்காரப்பட்டி போலீசார், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர். முன்னதாக நீதிபதி முன்பு போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ