உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

சிவகாசி, செப். 2 - சிவகாசி கிளை எல்.ஐ.சி., அலுவலகம் சார்பில் எல்.ஐ.சி.யின் 70 வது ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இன்சூரன்ஸ் வார விழாவிற்கு கிளை மேலாலாளர் முத்துக்குமரன் தலைமை வகித்தார். உதவி மேலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். தொழிலதிபர் ஜெயராஜ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து காப்பீட்டு திட்டத்தின் பயன்கள் குறித்தும், 70 ஆண்டுகளாக இன்சூரன்ஸ் திட்டத்திற்கு ஆதரவு தரும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் காரனேசன் சந்திப்பிலிருந்து எல்.ஐ.சி., அலுவலகம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை