உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நீரில் தவிப்பவர்களை மீட்க விழிப்புணர்வு பயிற்சி

நீரில் தவிப்பவர்களை மீட்க விழிப்புணர்வு பயிற்சி

திருச்சுழி: திருச்சுழி அருகே நீர் நிலைகளில் தவிப்பவர்களை மீட்க விழிப்புணர்வு பயிற்சியை தீயணைப்பு துறையினர் வழங்கினர். வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையில் நீர் நிலைகள், வெள்ளம் போன்ற காலங்களில் சிக்கித் தவிப்பவர்களை தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை சார்பாக மீட்க ஆலடிபட்டி கிராம கல்குவாரிகளில் பயிற்சி நடந்தது. லைப் ஜாக்கெட், கயிறுகள் மூலம் சிக்கி தவிப்பவர்களை மீட்க ஒத்திகை நடந்தது. இதற்கு நிலை அலுவலர் சந்திரசேகரன், சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் ஆகியோர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ