சிறந்த அறிவியல் ஆசிரியர் தேர்வு
விருதுநகர்:விருதுநகர் அரசுப் பள்ளி ஆசிரியர் ராஜகோபால் சிறந்த அறிவியல் ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டார்.தமிழக அரசு உயர்கல்வித் துறையின் அறிவியல் நகரம் சார்பில் சிறந்த அறிவியல் ஆசிரியருக்கான தேர்வு நடந்தது.பாடம் குறித்து ஆழமான அறிவை சோதித்தல், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய நிலைகளில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அதில், விருதுநகர் பட்டம்புதுார் அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் ராஜகோபால் உட்பட தமிழகத்தில் இருந்து 4 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படுகிறது.