மேலும் செய்திகள்
அந்தியூர் பத்ரகாளியம்மன்கோவிலில் கொடியேற்றம்
03-Apr-2025
தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே கிருஷ்ணாபுரம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் பத்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பெண்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய ஸ்தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்த குடங்களை கோயில் நிர்வாகிகள் முன் செல்ல காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக சென்றனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை கிருஷ்ணாபுரம் இந்து நாடார் உறவின்முறை சார்பில் பத்ரகாளியம்மன் கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
03-Apr-2025