மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
14-Mar-2025
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழாவில் நிறைவு நாளான நேற்று தேரோட்ட திருவிழா நடந்தது.இதை முன்னிட்டு நேற்று காலை 10:30 மணிக்கு தேருக்கு பெரிய மாரியம்மன் எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின் 11:05 மணிக்கு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஒரு மணி நேரத்தில் கோயில் வீதிகள் சுற்றி வந்து, மதியம் 12:05 மணிக்கு தேர் நிலையம் அடைந்தது. ஏராளமான பக்தர்கள் மொட்டை போட்டும், மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை தரிசித்தனர்.ஏற்பாடுகளை இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி ஆணையர் இளங்கோ, செயல் அலுவலர் ஜோதிலட்சுமி தலைமையில் அறநிலையத்துறையினர் செய்தனர்.
14-Mar-2025