உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பா.ஜ., மாவட்ட தலைவர் தேர்வு

பா.ஜ., மாவட்ட தலைவர் தேர்வு

விருதுநகர்: விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவராக மீண்டும் பாண்டுரங்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவருக்கான தேர்வு நடந்தது. இதில் 16 மண்டல தலைவர்கள், பழைய மண்டலதலைவர்கள், அவர்களின் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகிகள் இணைந்து மாவட்ட தலைவராக பாண்டுரங்கனை தேர்வு செய்தனர். பின் இவரை மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி அழைத்து, மாவட்ட அலுவலகத்தில் உள்ள தலைவர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !