பா.ஜ., ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: பெண்ணுரிமை பேணாத காங். கட்சியை எதிர்த்து காங்கிரசின் ஓரவஞ்சனைகளை கண்டித்து விருதுநகரில் பா.ஜ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர்கள் தினேஷ் ராஜா, சரவணதுரை ராஜா தலைமை வகித்தனர். மாநில செயற்குழு கஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எம்.பி.,யும் ஜவகர்லால் நேரு பல்கலை பேராசிரியருமான அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் மீது, பல்கலை மாணவிகள் அளித்துள்ள பாலியல் புகார் குறித்து மவுனம் சாதிக்கும் காங்கிரஸ் கட்சி தலைமையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.