உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்

ஸ்ரீவில்லிபுத்துார்; கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழகம், விருதுநகர் மருத்துவ கல்லூரி சார்பில், பல்கலைக்கழக வளாகத்தில் ரத்ததான முகாம் வேந்தர் ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். மாணவர் நல இயக்குனர் பாலகண்ணன், பார்மசி கல்லூரி முதல்வர் வெங்கடேசன் முகாமை துவக்கி வைத்தனர். இதில் 230 க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்த தானம் செய்தனர் அவர்களை பாராட்டி வேந்தர் ஸ்ரீதரன் சான்றிதழ்கள் வழங்கினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ராஜ் பிரதீப், கலசுரமன், சந்தனகுமார், தினேஷ் குமார், மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !