நக்கீரன் கோபால் வீட்டில் வெடிகுண்டு சோதனை
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நக்கீரன் ஆசிரியர் கோபால் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவலையடுத்து நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். நக்கீரன் ஆசிரியர் கோபால் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக இமெயிலில் தகவல் வந்தது. இதேபோன்று சென்னை டி.ஜி.பி., அலுவலகத்திற்கும் தகவல் சென்றது. இதையடுத்து அருப்புக்கோட்டை தெற்கு ரத்தின சபாபதி தெருவில் கோபாலுக்கு சொந்தமான வீடு உள்ளது. சில ஆண்டுகளாக இது பூட்டப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து விருதுநகரில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் அருப்புக்கோட்டை வீட்டில் நேற்று காலை 10:00 மணியளவில் சோதனையில் ஈடுபட்டனர். அரை மணி நேரமாக நடந்த சோதனையில் வெடிகுண்டு தகவல் புரளி என தெரிய வந்தது.