விருதுநகரில் வெடிகுண்டு சோதனை
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன், புது பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார், மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை நடந்த கார் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வளாகம், பார்க்கிங், நகர்பகுதிகளில் எஸ்.பி., கண்ணன் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியில் இருந்து அதிகாலை 2:00 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட்டார். மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், பயிற்சி டி.எஸ்.பி., ஆதித்யன், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், எஸ்.ஐ., சுடர்ஒளி பாண்டியன் உட்பட போலீசார் பலரும் ரயில்கள், ஸ்டேஷன் வளாகத்தில் வெடிகுண்டு தடுப்பு சோதனையில் ஈடுப்பட்டனர். மேலும் மாவட்ட வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார், மோப்பநாய் முகுந்த் உதவியுடன் நேற்று காலை ரயில்வே ஸ்டேஷன், பார்க்கிங், மார்க்கெட், புது பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.