உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  நுால் வெளியீட்டு விழா

 நுால் வெளியீட்டு விழா

விருதுநகர்: விருதுநகரில் ஜே.சி.ஐ., விருதை விருட்சம் அமைப்புகள் சார்பில் நுால்கள் வெளியீட்டு விழா, சிறுகதை விமர்சனப் போட்டி பரிசளிப்பு விழா, சாஹித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொற்பொழிவு நடந்தது. அம்பாள் முத்துமணி எழுதிய காலச் சித்திரங்கள், உடலோடு ஒரு உரையாடல் ஆகிய நூல்கள், பேராசிரியர் வினோத் எழுதிய காடறியும் இசை எனும் மூன்று நூல்களும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வெளியிட்டு பேசினார். தொழிலதிபர் ஆறுமுகச்சாமி, ஒய்வு ஆங்கிலப் பேராசிரியை பவானி, மதுரை தமிழ் வளர்ச்சித் துறையின் இணை இயக்குனர் சுசீலா பெற்றுக்கொண்டனர். நுாலாசிரியர்கள் ஏற்றுப் பேசினர்.மாணவர்கள் தனிஷ்கா ஸ்ரீ, தீபக், கார்த்திகா தேவிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ