பூணுால் அறுப்பு சம்பவம் பிராமண சமாஜம் கண்டனம்
அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை பிராமண சமாஜம் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை : திருநெல்வேலி தியாகராஜர் நகர் பகுதியில் ஆன்மிக நிகழ்ச்சிக்காக கலந்து கொள்ள சென்ற அகிலேஷ், 12, வயது சிறுவனின் பூணுால் சமூக விரோதிகளால் அறுக்கப்பட்டது. இனி பூணுால் அணிந்து வந்தால் அறுக்கப்படும் எனவும், மிரட்டி உள்ளனர். இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக காவல்துறை இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அதில் என்று கூறப்பட்டுள்ளது.