உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரியாபட்டியில் பாலப் பணிகள் தீவிரம்

காரியாபட்டியில் பாலப் பணிகள் தீவிரம்

காரியாபட்டி : காரியாபட்டியில் போக்குவரத்து சிரமத்தை கருத்தில் கொண்டு பாலப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரியாபட்டியில் மதுரை அருப்புக்கோட்டை ரோட்டில் கால்நடை மருத்துவமனை அருகே இருந்த பாலம் சேதமடைந்து, கழிவுநீர் செல்ல வழியின்றி அருகில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலக வளாகத்தில் தேங்கியது. இதையடுத்து ரூ. 25 லட்சத்தில் புதிய பாலம் கட்டும் பணி சில தினங்களுக்கு முன் துவக்கப்பட்டது. இதற்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ரோட்டில் தாலுகா அலுவலகம், கால்நடை மருத்துவமனை, பெட்ரோல் பங்க், கருவூலம், வங்கிகள், கோர்ட் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. போக்குவரத்து மாற்றத்தால் வீதிகளுக்குள் சுற்றி செல்ல வேண்டி இருப்பதால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, பாலப் பணிகள் தீவிர படுத்தப்பட்டு விரைவாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் பணி முடிந்து, பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை