குழாய் உடைந்து குடிநீர் வீண்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் குடிநீர் பகிர்மான குழாய் உடைந்து குடிநீர் 3 நாட்களாக வீணாக வெளியேறுகிறது.அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோடு நகராட்சி துாய்மை பணியாளர் குடியிருப்பு பகுதி வழியாக சுக்கிலநத்தம் ரோட்டில் சிறிய பாலத்தின் அருகில் தாமிரபரணி குடிநீர் பகிர்மான குழாய் செல்கிறது. இந்த குழாய் மூன்று நாட்களுக்கு முன்பு உடைந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. குடிநீர் வடிகால் வாரியத்தினர் குழாயை சரி செய்யாமல் இருப்பதால் இரவு பகலாக குடிநீர் வீணாக வாறுகளில் ஓடுகிறது. குழாய் உடைந்து கிடப்பதால், அருகில் உள்ள மண், கழிவுநீர் உள்ளே போகும் அபாயத்தில் உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் உடைந்த குழாயை பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.