உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற அழைப்பு

விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற அழைப்பு

விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்தி குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 2025ம் ஆண்டு ஏப்ரல் முதல் 58 வயது பூர்த்தி அடைந்தவராகவும், மாத வருமானம் ரூ. 6 ஆயிரம் மிகாமல் இருக்க வேண்டும்.மேலும் https://sdat.tn.gov.inஎன்ற இணையத்தில் உள்ள விண்ணப்பபடிவம், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் சென்றும் விண்ணப்ப படிவம் பெற்றுக் கொள்ளலாம். ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 24 முதல் ஜூலை 31 வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 31 மாலை 5:00 மணிக்குள் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேரில் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ