மேலும் செய்திகள்
கணக்காளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
04-Jan-2025
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: பல்வேறு அரசு திட்டங்களின் விவரங்களை சேகரித்தல், செயலாக்கத்தை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலகு உருவாக்கப்பட உள்ளது. இதில் பணிபுரிய இளம் தொழில்முறை வல்லுனர் பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு கணிப்பொறி அல்லது தகவல் தொழில்நுட்ப அறிவியலில் இளநிலை பொறியாளர் பட்டப்படிப்பு, தரவு அறிவியல், புள்ளியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது கணிப்பொறி அறிவியல், புள்ளியியல் மற்றும் தொடர்புடைய முதுநிலை பட்டப்படிப்புகள் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.விவரங்கள் https://virudhunagar.nic.inஎன்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தினை gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரி அல்லது புள்ளியியல் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு கடிதம் மூலம் அல்லது நேரிலோ ஜன.23மாலை 5:00 மணிக்குள் அனுப்ப வேண்டும், என்றார்.
04-Jan-2025