உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு

ஹிந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஹிந்து முன்னணி மாநில நிர்வாகிகள் உட்பட பலர் மீது டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போது ஹிந்து முன்னணி நிர்வாகிகள் யுவராஜ், வினோத் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் ஸ்ரீவில்லிபுத்துாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு போலீஸ் அனுமதி மறுத்தது. அதனையும் மீறி மாநில ஹிந்து முன்னணி துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்நிலையில் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ஜோதி புகாரில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சட்ட விரோதமாக ஒன்று கூடி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பிற மத உணர்வை புண்படுத்தும் வகையில் அவதூறாக பேசியதாக மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் , மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார், இணை அமைப்பாளர் பொன்னையா, மாநில அமைப்பாளர் குற்றாலநாதன், கோட்டத் தலைவர்கள் தங்க மனோகர், பிரம்மநாயகம், சிவலிங்கம், பா.ஜனதா மாவட்ட தலைவர் சரவணன் துரை உட்பட பலர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய் துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ