உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலை பெயரை போலியாக பயன்படுத்திய 13 பேர் மீது வழக்கு

பட்டாசு ஆலை பெயரை போலியாக பயன்படுத்திய 13 பேர் மீது வழக்கு

சிவகாசி: சிவகாசியில் பிரபல பட்டாசு ஆலையின் பெயர், லோகோ படத்தை பயன்படுத்தி போலியாக பட்டாசு விற்பனை செய்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், பிரின்டிங் பிரஸ் உரிமையாளர்கள் 3 பேரை கைது செய்தனர். சிவகாசியில் ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலை பதிவு செய்த பெயர் மற்றும் லோகோ படத்தை பயன்படுத்தி மோசடி செய்து சந்தையில் பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக ஆலை மேலாளர் வளையாபதி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் சாத்துார் மேலபுதுாரை சேர்ந்த ஜான்சன், சிவகாசி அய்யாதுரை, மருதமுத்துகுமார், மனோஜ் குமார், ஹரிஷ், ராஜன், ரோஹித், சிவகலைரத்தினம், சிவபாலாஜி, வீராசாமி, கணேசன், கண்ணன், முனியசாமி ஆகிய 13 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.பிரின்டிங் பிரஸ் உரிமையாளர்கள் ஜான்சன், அய்யாதுரை, மருதமுத்துகுமார் ஆகிய 3 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், அவர்களை ஏப். 4 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை