தாமதமின்றி சாதி உட்பட சான்றிழ்களை வழங்க வேண்டும்
அருப்புக்கோட்டை,: பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு தாமதமின்றி வழங்க வருவாய்துறையினருக்கு அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அறிவுறுத்தினார். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த அரசின் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு அரசாணை வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு 107 பயனாளிகளுக்கு ஆணை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததில், பள்ளிகள் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என வருவாய் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சான்றிதழ் கேட்டு இ-சேவை மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார். நிகழ்ச்சியில் பி.டி.ஓ., க்கள், அரசு அலுவலர்கள்,பயனாளிகள் கலந்து கொண்டனர்.