உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செயின்பறிப்பு வாலிபர் கைது

செயின்பறிப்பு வாலிபர் கைது

சாத்துார் : சாத்துார் தாயில்பட்டி பச்சையாபுரத்தை சேர்ந்தவர் அருண் மனைவி பிரியங்கா , 29. நேற்று முன்தினம் மதியம் இவரது வீட்டின் கதவை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சந்தோஷ் பிரபு, 30. தட்டினார். பிரியங்கா கதவை திறக்கவும் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடினார். அக்கம் பக்கத்தினர் வாலிபரை மடக்கி பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை