உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

திருச்சுழி : அருப்புக்கோட்டை அருகே குலசேகர நல்லூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி 29, நேற்று முன்தினம் மகளிர் சுய உதவி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.வழியில் அதே ஊரைச் சேர்ந்த மதாமாரி அவரது மகன் வசந்தகுமார் ஆகியோர் விஜயலட்சுமி வழிமறித்து, உனது மாமா மாரியப்பன் தரவேண்டிய பணத்தை கொடு என கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனது மாமாவிடம் கேட்கச் சொல்லியுள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜயலட்சுமியை அடித்து அவர் கழுத்தில் இருந்த 2 1/2 பவுன் செயினை பறித்துச் சென்றனர். திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை