சொக்கநாதன்புத்துாரில் தேரோட்டம்
சேத்துார்: சேத்துார் அருகே சொக்கநாதன் புத்துார் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் முன்னிட்டு தேரோட்ட விழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.சொக்கநாதன் புத்துாரில் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் அக்.3ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அன்னப்பட்சி ,குடை, புஷ்ப விமானம், தண்டியில் சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் மாரியம்மன் பத்ரகாளியம்மன் வடகாசி அம்மன் வீதி உலா நடந்தது. திருவாசக வேள்வி, அக்னி சட்டி, முளைப்பாரி, ஆன்மிக நிகழ்ச்சிகளும், வீர விளையாட்டுகளும், வான வேடிக்கைகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. தேர் சென்ற வீதிகளில் கும்பிடு கரணம் போட்டு பக்தர்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.ஏற்பாடுகளை மாரியம்மன் கோயில் திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.