இருட்டில் செண்பக தோப்பு ரோடு --திருட்டு அச்சத்தில் மக்கள்
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே செண்பகத் தோப்பு ரோட்டில் மின் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள், திருட்டு சம்பவங்களால் மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். ராஜபாளையம் அருகே செண்பகத் தோப்பு மெயின் ரோட்டில் அம்பேத்கர் நகர் முதல் சமத்துவபுரம் வரை இரண்டு பக்கமும் 15 ற்க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அத்துடன் கல்லுாரி, பள்ளிகள் என எப்போதும் பரபரப்புடன் காணப்படும் இந்த மெயின் ரோட்டில் 22ற்கும் அதிகமான மின்கம்பங்கள் அமைந்துள்ளது. இதில் பாதி அளவிற்கு மின்விளக்கு எரியாமல் இரவு நேரங்களில் கும்மிருட்டாக உள்ளது. திருட்டு அடிக்கடி விபத்துகள் , வழிப்பறி நடந்து வருகிறது.இதுகுறித்து திருமுருகன்: குற்றச்செயல் நடவடிக்கைகளை கண்காணிக்கவே இப்பகுதிக்கு போலீஸ் சார்பில் புதிய செக் போஸ்ட் அமைத்துள்ளனர். இந்நிலையில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளதையும் சரி செய்தால் பொதுமக்கள் அச்சமின்றி நடமாட ஏதுவாகும்.