உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வேன் கவிழ்ந்து குழந்தை பலி 25 பேர் காயம்

வேன் கவிழ்ந்து குழந்தை பலி 25 பேர் காயம்

நரிக்குடி:விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே ராமேஸ்வரத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்ததில் 4 மாத குழந்தை பலியானது. 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அச்சம்தவிர்த்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது தந்தைக்கு திதி கொடுக்க உறவினர்களுடன் வேனில் ராமேஸ்வரம் சென்றார். வேனை டிரைவர் பெருமாள் ஓட்டினார். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு நரிக்குடி மானாசாலை சாத்திச்சேரி வெல்லக்குளம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து முள் காட்டுக்குள் கவிழ்ந்தது, இதில் கோபிநாத், -ராணி தம்பதியின் 4 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. திருப்பதி, தமிழ்ச்செல்வி, சீனியம்மாள், முனீஸ்வரி, கோபிநாத், ராணி, அஜித், ராஜா உட்பட 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். திருச்சுழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை